" alt="" aria-hidden="true" />
கொரோனா பாதிப்பு : ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 - அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக்
நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடு முழுவதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இதுவரைஉயிரிழந்தனர். நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது. புதுவை.ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. கேரளா ஆந்திரா மாநில மக்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கபடும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலையோரம் வசிப்போர் வாழ்வாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் தற்போதைய சூழ்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் அடித்தட்டு மக்கள் அரசின் கடுமையான உத்தரவின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சகணக்கனோர் வேலை இல்லாமலும் வருமான இல்லாமலும் தத்தளித்து வருகின்றனர். பாதிக்கபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5000 வீதம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களையும் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போன்று தமிழகத்தில் சாலையோரங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர் வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக உணவு கிடைக்காமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.